ஜனவரி 15 2010 ல் பூரண (கங்கணவுரு) சூரிய கிரகணம்
இது பொதுவாக விஞ்ஞான, வான் சாஸ்திர ஆர்வலர்களிடையில் எதிர் பார்ப்பு மிக்க நிகழ்வாகும்.2010 ம் ஆண்டின் முதல் கங்கணவுரு (பூரண) சூரிய கிரகணம் சரியாக ஜனவரி 15 ம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறும் என்பது மிகப்பெரிய செய்தியாகும்.
இதன் போது அதிர்ஷ்டவசமாக சூரியன், சந்திரனின் 300km விட்டமுள்ள நிழல் விம்பத்தை ஏற்படுத்துவதால் இது பூமியின் சுற்றளவின் பாதி தூரம் வரை பயணிக்கும். அதாவது சந்திரனின் நிழல் சுமார் 20,000kmக்கு மேல் பூமிக்கு குறுக்காக பயணிப்பதுடன், பூமியில் உள்ள உயிர்களுக்கு சூரிய கிரகணத்தை காண அருமையான வாய்ப்பை வழங்கும்.

கனிப்புகளின்படி வளையவுருவால் சூழப்பட்ட சந்திரனின் நிழல் (பூரண கிரகணம்) அதன் பயணத்தை ஆபிரிக்காவிலிருந்து ஆரம்பித்து, சாட் (Chad), மத்திய ஆபிரிக்க குடியரசு, கொங்கோ ஜனநாயக குடியரசு, உகண்டா, கென்யா, சோமாலியா ஆகிய ஆபிரிக்க கண்ட நாடுகள் மீது வட்டமிட்டு இந்து சமுத்திரத்தின் மீதான அதன் பாதையை சென்றடயும்.இதன் போது பூரண கிரகணத்தின் தோற்ற காலமான 11 நிமிடங்கள் 08 வினாடிகள் நிறைவடைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமகாலத்தில் இலங்கை மற்றும் இந்தியா (தென்னிந்தியா) ஆகிய நாடுகள் கிரகணத்தினால் முத்தமிடப்படும் முதல் ஆசிய நாடுகளாக அமையும். பின்னர் அதன் பாதை பங்களாதேஷ், பர்மா, சீனா ஆகிய நாடுகளூடாக தொடர்வதுடன், விஞ்ஞானிகளுக்கும் பார்வையாளர்களுக்கும் ஆயுள் முழுவதும் மறக்க முடியாத ஒரு அனுபவமாக அமையும்.
எப்படி இருந்த போதும் பகுதி சூரிய கிரகணம் மேலும் பரவலாக சந்திரனின் பகுதி நிழலுருவின் பாதையில் அவதானிக்கப்படும். இதனை கிழக்கு ஐரோப்பா, ஆபிரிக்காவின் பெரும்பகுதி, ஆசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய பகுதிகளில் அவதானிக்க கூடிய சாத்தியமுள்ளது.
No comments:
Post a Comment